×

பராமரிப்பு இன்ஜினை பயன்படுத்திதஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளங்கள் சீரமைப்பு

தஞ்சாவூர், பிப். 23:  தஞ்சாவூர் ரயில் நிலையம் மிக முக்கிய பகுதியாக விளங்குகிறது. இங்கிருந்து, கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை, திருச்சி உட்பட பல மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதனால் தஞ்சாவூர் ரயில் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். அதிக அளவில் பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையமாக தஞ்சாவூர் விளங்குகிறது.இந்நிலையில், கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு, ரயில் தண்டவாளத்தில் இணைப்புகள் மற்றும் ஜல்லிக்கற்கள் தூய்மைப்படுத்தல் உட்பட பல சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில், நேற்று திருச்சியில் இருந்து சீரமைப்பு இன்ஜின் கொண்டு வரப்பட்டு தண்டவாளம் முழுமையாக சோதனை செய்யப்பட்டு தேவையான இடங்களில் சீரமைப்பு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தண்டவாளத்தில் வளையல் மற்றும் இணைப்பு பகுதிகள் சரியாக உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து அந்தந்த இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தண்டவாள இணைப்புகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது.

Tags : Thanjavur Railway Station ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை