×

திருப்பூர் குமரன் கல்லூரியில் நகை மதிப்பீடு படிப்புக்கு சான்றிதழ் வழங்கல்

திருப்பூர், பிப்.22:  நகை மதிப்பீட்டு படிப்புக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் குமரன் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் வரவேற்றார். திருப்பூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்க செயலர் முத்துரத்தினம், நடராஜன், வீரபாண்டி வீட்டு வசதி சங்க செயலாளர் நாகராஜ், கட்டுமான துறையின் செயலர் செல்வி, லயன்ஸ் கிளப் தலைவர் ஜான் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல வீட்டு வசதித்துறை துணை பதிவாளர் அர்த்தநாரீஸ்வரன் பேசுகையில், ‘‘ஏட்டுக்கல்வியுடன், கைத்தொழிலும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் நகை மதிப்பீட்டு படிப்பு நீங்கள் படித்துள்ளீர்கள். வணிகவியல் படிக்கும் உங்களுக்கு இந்த படிப்பு முக்கியமானது. இந்த படிப்பு படித்தால் கூட்டுறவு வங்கிகளில் பணியில் சேரலாம்’’ என்றார்.

மதுரை கோல்டு ஸ்மித் அகாடமி நிர்வாக இயக்குனர் திருப்பதி ராஜன் பேசுகையில், ‘‘இந்த படிப்பு 1998ம் ஆண்டு கல்வித்துறை அமைச்சராக அன்பழகன் இருந்தபோது தமிழகத்தில் முதன் முதலில் கொண்டு வரப்பட்டது. தற்போது இது நாடு முழுவதும் பரவிவிட்டது. 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் படித்துள்ளனர். 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இப்படிப்பு மூலம் வங்கி பணிகளுக்கு செல்வோருக்கு முன்னுரிமை கிடைக்கும். தமிழகத்தில் மட்டும் புதிதாக 6 ஆயிரம் வங்கிகள் ஆரம்பிக்க அனுமதி ேகட்கப்பட்டுள்ளது. வீட்டு கடன் வாங்குவதில் ஏராளமான நடைமுறைகள் உள்ளது. ஆனால், நகைக் கடன் வாங்குவதில் எந்த நடைமுறையும் இல்லை’’ என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நகை மதி்ப்பீட்டு படிப்பு குறித்த பயிற்சி முடித்த 31 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் பி.காம்., கூட்டுறவுத்துறை தலைவர் நித்யானந்த் நன்றி கூறினார்.

Tags : Tirupur Kumaran College ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்