×

இன்று உலக சிந்தனை தினம் திருச்சியில் மயங்கி விழுந்தவர் சாவு

தில்லைநகர்:திருச்சி உறையூர் நடு வைக்கோல்கார தெருவை சேர்ந்தவர் காந்திமதி (42). இவரது சகோதரர் கரிகாலன்(40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தூர் சர்ச் அருகில் மயக்கம் அடைந்த நிலையில் கீழே விழுந்து உள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : World Thinking Day ,Trichy ,
× RELATED பாஜவில் ரவுடிகளை சேர்த்ததாக அண்ணாமலை...