தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது, தமிழ் வளர்ச்சித் துறையின் 2022 ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27-12-1956 ம் நாளினை நினைவுகூறும் வகையில் 7 நாட்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரமாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கு இணங்க, இவ்வாண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் நேற்று முதல் 28ம் வரை ஒரு வார காலம் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சிமொழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் ரயில் நிலையம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி சிவகங்கை பூங்காவை சென்றடைந்தது.
தமிழ் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறை மாணவர்களின் கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் சுமார் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆட்சிமொழி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது தொடர்பாக துண்டு பிரசுரங்கள் அனைத்து கடைகளுக்கும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் திருவள்ளுவன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர்பானு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, முத்துக்குமார், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கொடியசைத்து கலெக்டர் தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் பகுதியில் இன்று மின்தடை தஞ்சாவூர்: இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், தஞ்சாவூரில் மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற் பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் 33 கேவி மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று (22ம் தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கரந்தை பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுக்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி. திருவாளம் பொழில், விளார்., நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி. காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
