×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 841 கனஅடி

மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று விநாடிக்கு 841 கனஅடியாக சரிந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1000 கனஅடியாக சரிந்துள்ளது. இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 993 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 841 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 103.74 அடியாகவும், நீர் இருப்பு 69.77 டிஎம்சியாகவும் உள்ளது.

Tags : Mettur ,
× RELATED மூதாட்டியை கழுத்தறுத்து கொன்ற...