×

வைக்கோல் ஏற்றி சென்ற டிப்பர் தீப்பற்றி எரிந்தது அனைத்து தரப்பு மக்களிடமும் சிறுதானியங்கல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுதா னிய பயிரின் முக்கியத்து வத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது : நாளுக்கு நாள் அதிவேகத்தில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல் உணவு உற்பத்தி யை ஈடுசெய்ய வேண்டி யது அவசியமாகிறது. அரிசி மற்றும் கோதுமை போ ன்ற முக்கிய உணவுத் தா னியங்களின் தேவை அதி கரித்து வருவதாலும் மக்கள் தங்கள் உணவுப் பழக் கத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத் தப்படுகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் மக்கள் திட்டமிடுவோர் மற் றும் விஞ்ஞானிகளின் மத் தியில் சிறுதானிய பயிர்கள் முக்கியத்துவத்தை பெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை சார் பில் 2023-ஆம் ஆண்டு சர்வ தேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுதானிய உற்பத்தி மற்றும் விற்ப னையை அதிகரிக்க வேளா ண்மைத் துறையின் மூலம் அனைத்து கிராமங்களி லும் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.வறட்சியை தாங்கி வளர்தல் நிறைந்த ஊட்டச்சத்து குறைந்த பூச்சி நோய் தாக்குதல் குறுகிய காலப்பயிர் மற்றும் குறை ந்த இடுபொருள் செலவு ஆ கியவை சிறுதானியங்க ளின் சிறப்பம்சங்களாகும்.


சர்வதேச சிறுதானிய ஆண் டையொட்டி பிரதானப் பயி ராக தமிழகத்தின் கேழ்வ ரகு தேர்வு செய்யப்பட்டுள் ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோ ளம், கம்பு, சோளம், கேழ்வர கு மற்றும் வரகு ஆகிய சிறுதானியப் பயிர்கள் ஆண்டு க்கு சராசரியாக 65000 எக் டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்து அதிகமுள்ள சிறுதானியங்களான சோ ளம், கம்பு, கேழ்வரகு, வரகு மற்றும் குதிரைவாலி போ ன்ற பயிர்களை உற்பத்தி மற்றும் விற்பனையை அதி கரிக்க கிராமங்கள் தோ றும் விழிப்புணர்வு ஏற்படு த்தவும் அனைத்து விவசா ய பயிற்சிகளிலும் விவசா யிகளுக்கு சிறுதானியங் களின் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கவும், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் சிறுதானிய பயிரின் முக்கியத் துவத்தை அனைத்து துறை அலுவலர்களும் கொண்டு சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டுமென மாவ ட்டக் கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்