பெரம்பலூர்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உயர்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்த வே ண்டும் என்று பெரம்பலூரில் நல்லோர் வட்டத்தின் சார்பில் மண்டல அளவில் நடத்தப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி வகுப்பை, பெரம்பலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஜவகர் தொடங்கி வைத்து பேசினார். பெரம்பலூரில் நல்லோர் வட்டத்தின் சார்பாக மண் டல அளவிலான தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பெரம்பலூர் நல்லோர் வட் டத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் வரவேற்றார். நிகழ்ச் சிக்கு பெரம்பலூர் நுகர்வோர் குறைதீர் ஆணைய த்தின் தலைவர் ஜவகர் தலைமை வகித்து பயிற்சி வகுப்பினைத் துவக்கி வைத்துப் பேசியதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உயர்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக அவை ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக மத்திய, மாநில அரசுகளின் உதவி திட்டங்கள், மானியங்கள், மாணவர்களுக்கான உதவி த்தொகைகள், மானியத் துடன் கூடிய கடன்கள், போன்ற விவரங்களை பெற்று அதனை உரியவர்களிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நல்லோர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலு கலந்து கொண்டு நல்லோர் வட்டத்தை ப் பற்றிய செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். இந்தப் பயிற்சி வகுப்பை நல்லோர் வட்டத்தின் ஆர்டிஐ துறை பொறுப்பாளரான மதுரையைச் சேர்ந்த ஹக்கீம் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சி வகுப்பிற்கு பெரம் பலூர் பறக்கும்படை தனி தாசில்தார் மாயகிருஷ்ணன், பெரம்பலூர் நுகர் வோர் குறைதீர் ஆணைய த்தின் முன்னாள் உறுப்பி னர் டாக்டர் அன்பழகன், பெரம்பலூர் இந்திய செஞ் சிலுவை சங்கத் தலைவர் ஜெயராமன், பனானா லீப் உரிமையாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகி த்து வாழ்த்துரை வழங்கி னர்.இந்தநிகழ்ச்சியில் ஆற் றும் கரங்கள்அறக்கட்டளை நிறுவனர் அருண்ஆபிரகாம் கலந்துகொண்டு உயிர் காக்கும் பயிற்சி குறித்து செயல்விளக்கம் அளித்து பயிற்சியளித்தார். இந்தப் பயிற்சி வகுப்பில் பெரம்பலூர் ,அரியலூர், கரூர், திருச்சி மாவட்டங்க ளைச் சேர்ந்த 100 நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற அனைவருக்கும் இறுதி யாக சான்றிதழ் வழங்கப்ப ட்டது. முடிவில் அரியலூர் நல்லோர் வட்டத்தைச் சேர் ந்த கோவிந்தன் நன்றி தெ ரிவித்தார். இந்த நிகழ்ச்சி யை தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாது காப்பு சங்கத்தின் மாநிலத் தலைவரான பெரம்பலூர் நல்லோர் வட்டத்தைச் சேர்ந்த கதிரவன் ஒருங்கிணைத்து தொகுத்து பேசினார்.
