×

சிறுவலூர் அரசு பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை கராத்தே பயிற்சி நடைபெற்றது. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும்பெண் குழந்தைகளுக்கு பயிற்சியை துவக்கி வைத்து பேசிய தலைமை ஆசிரியர் சின்னதுரை, பெண் குழந்தைகள் தற்காப்பு கலையை கற்று உடல் வலிமையும் மனவலிமையும் பெற வேண்டும்.

கராத்தே பயிற்சி பெறுவதன் மூலம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது. இதன் மூலம் எத்தகைய சூழலையும் பெண் குழந்தைகள் எதிர்கொள்ள தயாராகிறார்கள். எனவே இத்தகைய பயிற்சியினை அனைத்து மாணவிகளும் சிறந்த முறையில் பெற்றுக் எங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பயிற்சியினை மாணவ மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களின் மேற்பார்வையில் பயிற்சியாளர் ராமச்சந்திரன் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சியை வழங்கினார். ஆசிரியர்கள் தனலட்சுமி பத்மாவதி கோகிலா கபிலஷா ஆகியோர் மேற்பார்வையில் மாணவர்கள் கராத்தே பயிற்சியை மேற்கொண்டனர்.


Tags : Siruvalur Government School ,
× RELATED பெண்களால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்: காவல் ஆய்வாளர் பேச்சு