×

கொல்லிமலை அடிவாரத்தில் 10 அடிநீள மலைப்பாம்பு

சிக்கியதுசேந்தமங்கலம்: சேந்தமங்கலம் ஒன்றியம் கொல்லிமலை அடிவாரம், வெண்டாங்கி பகுதி சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (50) விவசாயி. இவர் தனது தோட்டத்தில் கரும்பு நடவு செய்துள்ளார். நேற்று முன்தினம் கரும்பு வெட்டும் பணி மும்மரமாக நடந்து வந்தது.

அப்போது கரும்பு காட்டுக்குள் 10 அடி நீள மலைப்பாம்பு சென்றது. இததை பார்த்த தொழிலாளர்கள் நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், வன சரகர் பெருமாள் தலைமையில் வனக்காப்பாளர் பிரவீன், சோதனைச்சாவடி உதவியாளர் கண்ணன் மற்றும் வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு காப்புக்காட்டில் விட்டனர்.

Tags : Kollimala ,
× RELATED கொல்லிமலை அடிவாரம் காப்புக்காட்டில்...