×

கொள்ளிடம் அருகே புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல் மன்ற விழா

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் வணிகவியல் மன்ற விழா நடைபெற்றது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை பேராசிரியர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழில் முனைவோராக வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சசிகுமார், வணிகவியல் துறைத்தலைவர் நாராயணசாமி, துறை பேராசிரியர்கள் மகேஸ்வரி, சுரேஷ், ராஜசேகர் உள்ளிட்ட அனைத்துத் துறை பேராசிரியர்களும். 150க்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Puttur Government Arts College ,Kollidam ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை