×

இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் இந்திய தேசிய மீனவர் சங்கம் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: இந்தியக் கடலில் இலங்கை கடற்கொள்ளையர்களின் கொலைவெறித் தாக்குதலை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய தேசிய மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திர நாட்டார் ஒன்றிய அரசுக்கு அனுபியுள்ள கோாரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: இலங்கை கடற்கொள்ளையர்கள் நவீன விசைப்படகுகளில் கொடுரமான ஆயுதங்களோடு இரவு வேளையில் கூட்டாக வந்து மரபு வழியில் தூண்டில் வலை கொண்டு மீன்பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தி கொள்ளையடித்து செல்கின்றனர். இதனால் நம் மீனவர்கள் இழப்புகளோடு உயிர் கொடுங்காயங்களோடு கரை சேர்ந்து மருத்துவமனையில் உள்நோயாளியாகி ஊனமாகிடும் பரிதாப அவல நிலைகள் தொடர்ந்து வருகிறது. 1984 இலங்கை இனப்பிரச்சனை தீவிரமடைந்தது. இலங்கையில் வன்முறை வழிப்பறி கும்பலை தூண்டிவிட்டு பயங்கர ஆயுதங்களோடு இரவு நேரத்தில் கொலைவெறி நாக்குநல் நடத்தி கொள்ளையடித்து செல்லும் கொடூரங்கள் எல்லாம் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீன்பிடி படகுகளை இரவு வேளையில் இலங்கை கடற்கொள்ளையர் பலர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து சுற்றிவளைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தி பயங்கர ஆயுதம் கொண்டு வெட்டியும், இரும்பு தடி கொண்டு அடித்து, உதைத்து, படகுகளில் இருந்த மீன்பிடி கருவிகள், பிடித்து வைத்திருந்த மீன்கள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். உயிர் தப்பி கொடுங்காயத்துடன் மீனவர்கள் கரை சேர்ந்து அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் உள்ளார் என்பது மிகவும் வேதனை ஆகும். தொடரும் இலங்கையின் கொலை வெறித்தாக்குதலை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தவேளர்டும். இலங்கை கடற்கொள்ளை கும்பல் இந்திய மீளவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி கொள்ளையடித்து உயிருக்கும் உடமைக்கும் பேராபத்தையுடண்டாகிக் கொண்டு வருகிறது. தமிழக மீனவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதம் வைத்துக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : National Fishermen's Association of India ,Union Government ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை