×

7 மையங்களில் இல்லம் தேடி கல்வி 26 தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தோகைமலை: கரூர் மாவட்டம் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் தோகைமலை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தில் பணியாற்றும் தொடக்கநிலை வகுப்பு நடத்தும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது. கொரோனா பெருந்தொற்று பரவல் சார்ந்த பொது முடக்கம் ஏற்பட்ட காலங்களில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி அனைத்து பகுதிகளிலும் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தோகைமலை ஒன்றியத்தில் தொடக்கநிலை மையத்தில் வகுப்பு நடத்தும் தன்னார்வலர்களுக்கு தோகைமலை, கீழவெளியூர், ஆலத்தூர், நெய்தலூர், கூ.உடையாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அ.உடையாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 7 மையங்களில் தனித்தனியாக பயிற்சிகள் நடந்தது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தமிழ் படித்தல், எழுதுதல், ஆங்கிலம் படித்தல் எழுதுதல், கணிதம் எண்கள் அறிதல் முதலான திறன்களை மேம்படுத்துவதற்கு பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 226 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். தோகைமலை ஒன்றியத்தில் 7 மையங்களில் நடந்த பயிற்சிகளை தோகைமலை வட்டார கல்வி அலுவர்கள் மாகாளி, ராஜலட்சுமி ஆகியோர் பயிற்சினை மேற்பார்வை செய்தனர்.

Tags :
× RELATED கரூர் அருகே வடசேரி பெரிய ஏரியில் இறந்த கிடந்த புள்ளி மான்