×

ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை திருவிழா கோலாகலம் : பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஆரணி, பிப். 21:  ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் மிக பழமை வாய்ந்த அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயில், மகா சிவராத்திரியை முன்னிட்டு 40ம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. அப்போது, கோயில் அங்காளம்மனுக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடைப்பெற்றது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் வாகனத்தில் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பொதுமக்கள் விளைதானியங்கள், கொழுக்கட்டை அம்மன் மீது வீசி மயான கொள்ளையில் வழிப்பட்டனர். தொடர்ந்து, கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குழந்தை வரம் வேண்டியும், வேண்டுதல் நிறைவேற்றியவர்கள் அம்மன் முன்பு தங்கள் குழந்தைகளை வைத்து ஏலம் விடுதல், இதில், குழந்தையை ஏலம் எடுக்கும் நபர்களுக்கு அந்த குழந்தையின் பெற்றோர்கள் ஏலத் தொகையை அவர்களிடம் வழங்கி, குழந்தையை பெற்றுக் கொண்டனர்.
இதில் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

Tags : Angala Parameshwari temple ,Adanur village ,Arani ,mayana kolai festival ,Kolakalam: Devotees ,Swami ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...