×

கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு தொழில் நுட்பம் குறித்த பயிற்சி முகாம்

கறம்பக்குடி,பிப்.21: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி உயிரியல் இடு பொருள்கள் தயாரிப்பு தொழில் நுட்பம் பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம் கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதி கிராமத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு கறம்பக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நெப்போலியன் தலைமை வகித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் விவசாய மானாவாரி மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் அளிக்கப்படும், இடு பொருட்கள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் மானிய விவரங்கள் பற்றியும் அதில் அனைத்து விவசாயிகளும் பயனடைய வேண்டும் என்றார்.

பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய குடிமியான்மலை வேளாண்மை அலுவலர் அபிநயா பேசும்போது, உயிர் உரங்கள் தயாரிப்பு முறைகள் மற்றும் மண்புழு உரங்கள் தயாரித்தல் இயற்கை உரங்கள் தயாரித்தல் மற்றும் பயன்பாடுகள் பற்றியும் தெளிவாக எடுத்து கூறினார்.
மேலும், அவற்றில் அசோஸ் ஸ்பைரிலம், ரைசோபியம், நுன்சத்து ஆகியவற்றை எளிய முறையிலும் செலவினம் இல்லாமல் பயன் படுத்துவது பற்றியும் அவற்றின் மூலம் உரம் செலவுகளை குறைத்து அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எனவே விவசாயிகள் அனைவரும் பயிர்களுக்கும் வயல் தெளிக்கும் உயிரியல் இடு பொருட்களை பெரும் அளவில் பயன்படுத்தி ரசாயன உரங்கள் மற்றும் ரசாயன மருந்துகளை பயன்படுத்தாமல் பயிர் செய்து நம் உடல் நலத்தை நாமே பேணி காப்போம் என்றார்.

இந்த பயிற்சி முகாமில் நிறைவுரை ஆற்றிய வேளாண்மை உதவி இயக்குனர் அட்மா திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மாவட்டத்திற்குள்ளான பயிற்சி மற்றும் கற்றறிவு பயணமாக வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்குள் அழைத்து சென்று அங்குள்ள தொழில் நுட்பங்களை கடைபிடித்து நாம் அவ்வாறு செயல்பட்டு விவசாயிகள் அதிக வருமானம் பெற கேட்டு கொண்டார். இந்த பயிற்சி முகாமில் அப்பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கறம்பக்குடி வேளாண் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் பால்சாமி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் மணிமேகலை, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் வீரமணி, கவியரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

மாணவியருக்கு கராத்தே, ஜூடோ, டேக்வண்டோ, சிலம்பம் ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி 2022-23ம் கல்வி ஆண்டிலும், மாவட்ட உடற்கல்வி ஆய்வர்கள் உதவியோடு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாரம் இரண்டு நாட்கள் மாலையில் ஒரு மணி நேரம் என்ற வீதத்தில் மூன்று மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

Tags : Karambakudy Agricultural District ,
× RELATED கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்