×

திருவேங்கடத்தில் குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளன்று திமுகவினர் நலத்திட்ட உதவி வழங்க ஏற்பாடு

திருவேங்கடம்,பிப்.21: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு ெசய்யப்பட்டு வருவதாக திருவேங்கடத்தில் நடந்த குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசினார். தென்காசி வடக்கு மாவட்டம், திருவேங்கடத்தில் குருவிகுளம் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் ஜெயராமன், குருவிகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சேர்மத்துரை தலைமையில் நடந்தது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட பொருளாளர் சங்கை சரவணன், மாவட்ட துணைத்தலைவர் ராஜதுரை, நகரச்செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசுகையில் ‘‘ தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச் 1ம் தேதி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு ெசய்யப்பட்டு வருகிறது. எனவே, ஒவ்வொரு கிளையிலும் அந்தந்த செயலாளர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கட்சிக் கொடி ஏற்றியும் கொண்டாட வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கிளையிலும் பூத் கமிட்டி உடனடியாக அமைக்க வேண்டும்.

செயல் வீரர்கள் தங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இதனால் கட்சிக்கும், நிர்வாகத்திற்கும் நற்பெயரை ஏற்படுத்தி வாக்கு வங்கியை உயர்த்த பாடுபட வேண்டும். அதற்காக நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கான பணிகளை மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்’’ என்றார்.
கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் பெரியதுரை, மாவட்டப் பிரதிநிதிகள் சத்திரப்பட்டி ஊராட்சி தலைவர் அய்யலுசாமி, பொன்னுத்தாய் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Kuruvikulam West ,Union ,Working ,Committee ,Thiruvenkatam ,Chief Minister ,M.K. ,DMK ,Stalin ,
× RELATED திருத்தணி ஒன்றியத்தில் ரூ.1.34 கோடி...