×

விபத்தை தடுக்க சென்டர் மீடியன் பொதுமக்கள் வேண்டுகோள்

திருவாடானை, பிப்.21:  திருவாடானையில் தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகிலும், திரவுபதி அம்மன் கோவில் அருகேயும் ஆபத்தான வளைவுகள் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை பிரதான சாலை என்பதால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த வளைவுகளில் வரும்போது எதிரே வரும் வாகனத்தை கணிக்க முடியாமல் நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும் இந்த பிரதான சாலையில் ஆபத்தான வளைவுகளில் வரும்போது ஒரு சில வாகன ஓட்டிகள் கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் வந்து இந்த இடங்களில் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இதனால் அப்பகுதியில் தினசரி பயணிக்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும் அச்சத்துடன் செல்வதாக தெரிவிக்கின்றனர்.

ஆகையால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆபத்தான வளைவுகளிலும் சாலையின் நடுவில் சிறிய தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமென அப்பகுதி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகள் கூறுகையில்: தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு ஆபத்தான வளைவுகளில் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது எதிர் திசையில் வரும் வாகனத்தை கணிக்க முடியாமல் ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு விடுகிறது.    இரு ஆபத்தான வளைவுகள் உள்ள இடங்களில் அடிக்கடி நடக்கும் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.

அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும், வாகனங்களில் செல்வோரும் ஒருவித அச்சத்துடன் இந்த ஆபத்தான வளைவுகளை கடந்து செல்கின்றனர். ஆகையால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு ஆபத்தான வளைவுகளின் நடுவில் சென்டர் மீடியன் அமைக்க வேண்டுமென அப்பகுதி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Center Median ,
× RELATED பெரம்பலூர் அருகே பரிதாபம் சென்டர்...