×

தேனூரில் மகா சிவராத்திரி விழா

வாடிப்பட்டி, பிப். 21: சமயநல்லூர் அருகே தேனூரில் 15 ஆண்டுகளுக்கு பின் பொன்னர்- சங்கர், வீரமலை கோவில் மாசி மகா சிவராத்திரி பெருவிழா நடைபெற்றது சமயநல்லூர் அருகேயுள்ளது தேனூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பொன்னர்- சங்கர், வீரமலை கோயில். பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி விழா அதிவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இங்கு பல்வேறு காரணங்களால் கடந்த 15 ஆண்டுகளாக மாசி மகா சிவராத்திரி விழா முறையாக நடைபெறவில்லை

இந்நிலையில் இந்த ஆண்டு மாசி மகா சிவராத்திரி பெருவிழா 15 ஆண்டுகளுக்கு பின் அதிவிமர்சையாக கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக அழகர்கோயிலில் நீராடி பொன்னர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அங்கு இரவு தங்குதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து முகூர்த்தக்கால் நடும் விழாவும் நடைபெற்றது. பின்னர் பிப். 18ம் தேதி கோயில் பூர்வீக வீட்டிலிருந்து சாமி பெட்டியை அலங்கரித்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர்.

பின்னர் பிப்.19ம் தேதி குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் நேற்று 5வது நாள் நிகழ்ச்சியாக பொதுமக்கள் அவரவர் வேண்டுதல் நிறைவேற்றி பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமி பெட்டி மீண்டும் கோயில் பூர்வீகத்து வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு அபிஷேகத்துடன் சிவராத்திரி பெருவிழா நிறைவுற்றது. விழாவில் தேனூர், முடுவார்பட்டி, தேவசேரி பகுதிகளை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

Tags : Maha Shivratri festival ,Thenur ,
× RELATED பாடாலூர் அருகே விபத்து பைக் மீது கார் மோதல்: பெண் பலி