×

துடியலூரில் கெளசிகா நதி கிளை வாய்க்கால் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெ.நா.பாளையம். பிப்.21: கோவை  துடியலூரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வரும் கௌசிகா நதியின் கிளை வாய்க்கால் உள்ளது. விவசாய நிலங்களுக்கு பயண்படும் விதமாக தடாகம், கணுவாய்  வழியாக மழைக்காலங்களில் வரும் தண்ணீர்  வெள்ளக்கிணறு குட்டை மற்றும் சின்ன வேடம்பட்டி குளத்திற்கு செல்கிறது.

இந்த மழை கால வெள்ள நீர் வரும் கௌசிகா நிதி கிளை வாய்க்கால்  மேட்டுப்பாளையம் சாலை உள்ள விஸ்வநாதபுரத்தில் உள்ளது. இந்த நீர்வழிப்பகுதியை தற்போது பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 14வது வார்டு  அமர்ஜோதி நகர்  சாலை அருகே உள்ள நீர்வழி வாய்க்காலை நீண்ட தூரத்திற்கு  மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்து சம படுத்தப்பட்டுள்ளது. இதனால்  வாய்க்காலின் அளவு குறுகி விட்டது.  

தமிழ்நாடு முழுவதும் மாநில பொதுப்பணித்துறை குளம் குட்டை பள்ளங்கள் நீர்வழிப் பாதைகளை கண்டறிந்து  சுத்தம் செய்ய வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் கோவை மாவட்ட பொதுப்பணித்துறையினரால் பராமரித்து வரும் கௌசிகா நதி செல்லும் பகுதியில் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து பாதியாக குறுக்கி விட்டனர் என்றும், நீர்வழி பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மீட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.துடியலூர் அருகே மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் கெளசிகா நதி கிளை வாய்க்காலின் அகலம் குறைந்துள்ளது.

Tags : Kelasika ,Dudiyalur ,
× RELATED பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்...