குன்னூர்,பிப்.21: குன்னூர் கன்ட்டோன்மென்ட் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வரும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள். இந்தியா முழுவதும் ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை கட்டுபாட்டில் சுமார் 64 கன்டோன்மென்ட் பகுதியில் உள்ளன. இவை அனைத்தும் ராணுவத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இதில் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். இந்தியா முழுவதும் சுமார் 57 கன்டோன்மெண்ட் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் படி ஏப்ரல் 30 தேதி தேர்தல் நடத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் மற்றும் சென்னை பல்லாவரம் ஆகிய கன்டோன்மெண்ட் பகுதிகள் உள்ளது. குன்னூரில் வெலிங்டன் கன்டோன்மெண்ட் பகுதியில் சுமார் 7 வார்டுகள் உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக, அதிமுக, பாஜக,உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட ஆயத்தம் ஆகி வருகின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தல் முடிந்தவுடன் குன்னூர் கன்ட்டோன்மென்ட் தேர்தல் களகை்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக ஏழு வார்டுகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பத்து ஆண்டுகள் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற இருப்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
