×

போலி ஆவணம் மூலம் 14 கோடி சொத்தை தங்கை பெயரில் பதிவு செய்ய முயன்ற பலே ஆசாமி சிக்கினார்: சார்பதிவாளர் சுஜாதா போலீசாரிடம் ஒப்படைத்தார்

சென்னை: கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் வேலு(54). இவர் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வேலு தனது தங்கை மற்றும் நண்பர்களான ரமணா, நாகராஜன் ஆகியோர் வந்தனர். அப்போது தி.நகரில் 14 கோடி மதிப்புள்ள சொத்தை வேலு, தனது தங்கைக்கு விற்பனை செய்ததாக ஆவணங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்தார். அதன்படி வேலு தங்கை பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவும் செய்யப்பட்டது.பின்னர் வேலு கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்த போது முன்னுக்கு பின் முரணாக இருந்தது. உடனே சார்பதிவாளர் சுஜாதா ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது வேலு கொடுத்த அனைத்து ஆவணங்களும் போலியானது என தெரியவந்தது. உடனே சார்பதிவாளர் சொத்து இருக்கும் தி.நகர் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது நிலத்தின் உரிமையாளர் பழனிவேல் ரத்தினசபாபதி. இவர் தன்னுடைய சொத்தை யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. உடனே சார்பதிவாளர் சுஜாதா சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே போலி ஆவணங்கள் மூலம் தனது தங்கை பெயரில் பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை வாங்க நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வேலு வந்தார். அப்போது சார்பதிவாளர் சுஜாதா மோசடி நபரான வேலுவை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். அதன்படி போலீசார் வேலு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரமணா மற்றும் நாகராஜனை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வேலுவிடம் நடத்திய விசாரணையில் வயதான தம்பதிகள் மற்றும் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத நிலங்களை தேர்வு செய்து அந்த நிலத்திற்கு அதன் உரிமையாளர் பவர் கொடுத்தது போல் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்து உறவினர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்து அந்த நிலத்தை பின்னர் நல்ல விலைக்கு விற்பனை செய்து மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இந்த மோசடியின் பின்னணியில் பலர் ஈடுபட்டுள்ளதால் இந்த வழக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது….

The post போலி ஆவணம் மூலம் 14 கோடி சொத்தை தங்கை பெயரில் பதிவு செய்ய முயன்ற பலே ஆசாமி சிக்கினார்: சார்பதிவாளர் சுஜாதா போலீசாரிடம் ஒப்படைத்தார் appeared first on Dinakaran.

Tags : Bale Asami ,Sujata ,Chennai ,Velu ,Bengaluru, Karnataka ,Saitappettai ,Chennai.… ,Sujatha ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...