×

மயிலாடும்பாறை அருகே கஞ்சா விற்றவர் கைது

வருசநாடு, செப். 27:மயிலாடும்பாறை பகுதியில் கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். குமணன்தொழு பகுதியில் மயிலாடும்பாறை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குமணன்தொழு சுடுகாடு அருகே காமன்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (38) என்பவர் நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். கஞ்சா வைத்திருந்த வழக்கில் போலீசார் பிரபுவை கைது செய்தனர்.

மேலும் கஞ்சா வைத்திருந்த பிரபுவிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் கண்டமனூர் வருசநாடு கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Mayiladumpara ,
× RELATED க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அரசு...