×

நெல்லையில் மனித உரிமை நீதிபதி விசாரணை

நெல்லை, செப். 24: நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் மனித உரிமை மீறல் தொடர்பான 25 வழக்குகளை நெல்லையில் மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயசந்திரன் நேற்று விசாரணை நடத்தினார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை அதிகாரிகள் மனித உரிமை மீறல் குறித்த 25 வழக்குகளை மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயசந்திரன் முன்னிலையில் நேற்று நெல்லையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் வக்கீல்கள், வழக்கு தாக்கல் செய்த பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். இந்த வழக்குகளில் புகார்தார்கள், பாதிக்கப்பட்டவர்கள், காவல் துறை  அதிகாரிகள் மற்றும் சாட்சிகளிடம் நீதிபதி குறுக்கு விசாரணை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தினார்.

Tags : Nella ,
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு...