×

என்ஐஏ சோதனையை கண்டித்து நெல்லையில் பிஎப்ஐயினர் சாலை மறியல்


நெல்லை, செப்.23: நெல் லை, தென்காசி, கோவை, மதுரை உள்ளிட்ட 11 இடங்களில் எஸ்டிபிஐ கட்சி மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனையை  கண்டித்து நெல்லை, தென்காசியில் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட  84 பேரை போ லீசார் கைது செய்தனர். தமிழகம், கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் எஸ்டிபிஐ கட்சி மற்றும் பாப்புலர்  பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) நிர்வாகிகள் வீடு, அலுவலகம் மற்றும்  மதரஸாக்களில் தேசிய புலனாய்வு அமைப்பு( என்ஐஏ) உளவு துறையினர் சோதனை  மேற்கொண்டனர். இதில் தமிழகத்தில் கோவை, மதுரை, கடலூர், திண்டுக்கல், தேனி, சென்னை, காரைக்கால், ராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் ஏர்வாடி மீனாட்சிபுரம் பெண்கள் மதரசா, தென்காசி மாவட்டத்தில் பண்மொழி உள்ளிட்ட 11 இடங்களில் என்ஐஏ (தேசிய புலனாய்வு பிரிவினர்) சோதனையிட்டனர். இதில் எஸ்டிபிஐ மற்றும் பிஎப்ஐ நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

இதனை கண்டித்து  மேலப்பாளையம் ரவுண்டானாவில் தடையை மீறி பிஎப்ஐ நகர தலைவர் ஷேக் தாவூது தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் காஜாமைதீன், செயற்குழு உறுப்பினர்கள் யூசுப்ரகுமான், ராசிக் பைஜூ, இசாக் உள்ளிட்ட 22 பேரும் மற்றும் 8 பெண்கள் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை, போலீசார் மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதன் காரணமாக அந்த வழியாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது போன்று சேரன்மகாதேவி அருகேயுள்ள பத்தமடை காவல் நிலையம் அருகே தடையை மீறி மறியலில் ஈடுபட்ட பிஎப்ஐ நகர செயலாளர் ஷேக்செய்யதலி தலைமையில் 16 பேரையும், நெல்லை பேட்டையில் பிஎப்ஐ பகுதி தலைவர் ஷேக்சுல்தான் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 13 பேரையும் என 59 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்று தென்காசி மாவட்டத்தில் செங்ேகாட்டை அருகேயுள்ள பண்மொழியில் 25 பேர் தடையை மீறி அரை மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை, போலீசார் கைது செய்தனர். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 84 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags : PFIs ,Nella ,NIA ,
× RELATED நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார்...