×

திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்

சேந்தமங்கலம், செப்.22: சேந்தமங்கலத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. இதில் திருச்சி சிவா எம்பி கலந்து கொண்டார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் சேந்தமங்கலத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்பி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும், நாடாளுமன்ற மேலவை குழு தலைவருமான திருச்சி சிவா எம்பி, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். திருச்சி சிவா எம்பி பேசுகையில், ‘திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான். சமூக நீதி, மொழி உணர்வு, அனைவருக்கும் சமமான கல்வி, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றில் முதல்வர் சிறப்பான முறையில் கவனம் செலுத்தி ஆட்சி நடத்தி வருகிறார். இளைஞர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் 50 ஆண்டுகால கடினமான உழைப்புக்கு கிடைத்த பரிசு தான் இந்த முதல்வர் பதவி. முதல்வரின் காலை உணவு திட்டம், இந்தியாவுக்கே முன்மாதிரியாக அமைந்துள்ளது,’ என்றார்.கூட்டத்தில், முன்னாள் எம்பி சுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, அசோக்குமார், பாலசுப்பிரமணியம், செந்தில்முருகன், பேரூர் செயலாளர்கள் தனபாலன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : dravid ,kanjagam ,
× RELATED கஞ்சா விற்ற 3 பேர் கைது