×

வெள்ளியணை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த ஐடி ஊழியரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

கரூர், செப். 13: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த ஐடி நிறுவன ஊழியரை, கரூர் தீயணைப்பு நிலையத்தினர் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கோவையை சேர்ந்தவர் சிக்கந்தர்பாட்ஷா(23. இவர், மதுரையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது உறவினர் ஒருவருடன், கோவையில் இருந்து நாகர்கோயில் சென்ற ரயிலில் மதுரைக்கு சென்றுள்ளார்.இந்த ரயில் நேற்று அதிகாலை 4மணியளவில் கரூர் மாவட்டம் வெள்ளியணைக்கு முன்னதாக உள்ள செல்லாண்டிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, ரயிலின் படிக்கட்டு அருகில் நின்று பயணம் செய்து கொண்டிருந்த சிக்கந்தர்பாட்ஷா எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்து உடன் பயணித்த உறவினர், தனது செல்போன் மூலம் கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான குழுவினர், நேற்று அதிகாலை 5மணியளவில் சிக்கந்தர்பாட்ஷா எந்த இடத்தில் விழுந்தார் என்பதை அறியும் வகையில் தண்டவாளத்தில் 4 கிமீ தூரம் வரை நடந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு வெள்ளியணைக்கு முன்னதாக உள்ள செல்லாண்டிபட்டியை ஒட்டியுள்ள ரயில்வே டிராக் ஓரம், சிக்கந்தர்பாட்ஷா அடிபட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.உடனடியாக அவரை மீட்ட தீயணைப்புக் குழுவினர்,108ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிக்கந்தர் பாட்ஷாவுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தக்காளி செடியை தாக்கும் முதன்மை நோயாக இருப்பது இலைசுருட்டு நச்சுயிரி நோய் ஆகும். வெண் ஈக்கள் மூலமாக பரவும் நச்சுயிரி நோயானது வெயில் காலங்களில் மிகவும் அதிகமாக காணப்படும். இதனால் எக்டேருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்தோயேட் 500 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் இலைசுருட்டு நச்சுயிரி நோயை கட்டுப்படுத்துலாம்.

Tags : Vellianai ,
× RELATED கரூர்- மூக்கணாங்குறிச்சி சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை