×

குறிஞ்சிப்பாடியில் புதிய வாரச்சந்தை பேரூராட்சி செயற்பொறியாளர் ஆய்வு

குறிஞ்சிப்பாடி, செப். 13:குறிஞ்சிப்பாடியில் புதிய வாரச்சந்தை அமைய உள்ள இடத்தில் உதவி செயற்பொறியாளர் சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளார். அதில், குறிஞ்சிப்பாடிக்கு காய்கறி மற்றும் வாரச்சந்தை இல்லாததால், வாரச்சந்தை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து, குறிஞ்சிப்பாடியில் வாரச்சந்தை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சண்முகம், குறிஞ்சிப்பாடியில் புவனகிரி சாலையில் உள்ள ரெட்டிகுளம் அருகே உள்ள இடத்தை வாரச்சந்தை அமைப்பதற்காக பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், குறிஞ்சிப்பாடியில் 4 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகளை, பேரூராட்சிகள் செயற்பொறியாளர் சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, செயல் அலுவலர் கிருஷ்ணன், சேர்மன் கோகிலா குமார், இளநிலை பொறியாளர் ஜோதி முருகன், தலைமை எழுத்தர் முருகவேல் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

Tags : Municipal Executive Engineer ,Kurinchipadi ,
× RELATED என்எல்சி சார்பில் கட்டப்பட்டது அரசு...