×

உலக இரட்சகர் திருத்தல திருவிழாவை முன்னிட்டு திசையன்விளை நகர வீதிகளில் நற்கருணை பவனி

திசையன்விளை, செப். 10: திசையன்விளை உலக இரட்சகர் திருத்தல திருவிழாவில் 8ம் திருநாளான நேற்று நகர வீதிகளில் நற்கருணை பவனி  நடந்தது. இதையொட்டி நேற்று காலை அருட்திரு குணசேகரன் ராஜையா தலைமையில் திருப்பலி நடந்தது. திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள், திருக்குடும்ப சபை, மரியாயின் சேனை, வின்சென்ட் தே பவுல் சபை, இரட்சகர் இளையோர் இயக்கம், மாதா சபையின் சிறப்பித்தனர். மாலை ஆலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நற்கருணையை ஏந்தியபடி ஊர்வலமாக வடக்கன்குளம் திருத்தல அதிபர் ஜான்பிரிட்டோவை அழைத்து சென்றனர். முன்னதாக புதுநன்மை பெறும் சிறுவர் சிறுமிகள் மலர்களை தூவியபடி சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் வரிசையாக அவர்களை பின்தொடர்ந்தவாறு பாடல் பாடியபடி சென்றனர்.

உடன்குடி சாலையில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது. விழாவில் அருட்தந்தையர்கள் ஆரோக்கியராஜ், விக்டர் (மன்னார்புரம்), வெனி இளங்குமரன் (பொத்தக்காலன்விளை), ஜஸ்டின் (மலையன்குளம்), கிறிஸ்துராஜா (இலங்குளம்) மற்றும் ஜோ, அருள்பிரபாகர், மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு கிறிஸ்தவ இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இன்று காலை உவரி திருத்தல அதிபர் டோம்னிக் அருள்வளன் தலைமையில் நடைபெறும் திருப்பலியை மணல் அன்னை, சகாய அன்னை அன்பியம், பங்குப்பேரவை மற்றும் வெளியூர் வாழ் பங்கு மக்கள் சிறப்பிக்கின்றனர். மாலையில் கோட்டார் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், புனித சூசையப்பர் புதிய கெபி அர்ச்சிப்பும் நடக்கிறது. இரவு ஆலயத்தை சுற்றி சப்பர பவனி நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலியும், 9.30 மணிக்கு திருமுழுக்கு நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணிக்கு நகர வீதிகளில் சப்பர பவனியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அந்தோனி டக்ளஸ், பங்குப்பேரவை, அருட்சகோதரிகள், அன்பியங்கள் மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.

Tags : World Saviour's Shrine Festival ,Nakaruna Bhavani ,Vektionvilai ,
× RELATED நெல்லை மாவட்ட காங்., தலைவர்...