தூய்மை இந்தியா திட்டத்தில் தியாகராஜ சுவாமி கோயிலில் தூய்மை பணி

திருவாரூர்,செப்.10: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கான்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் கோயில்களில் தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேசிய மாணவர் படை பங்கேற்புடன் மாபெரும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் வளாகத்தில் திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நாட்டுநலப்பணி திட்ட மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பளார் ராஜப்பா தலைமையில் நடைபெற்ற இந்த தூய்மை பணியினை மேற்படி கோயிலின் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன் தொடங்கி வைத்தார். இதில் திட்ட அலுவலர் கோமதி, உதவி திட்ட அலுவலர் எழிலரசி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: