×

நாய் தகராறில் வாலிபர் கால் துண்டிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பி அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா

விழுப்புரம், செப். 7: நாய் உயிரிழந்ததால் ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் தனது காலை இழந்தார். இதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். விழுப்புரம்  அருகே வேட்டப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (34), இவரது சகோதரர்  மணிபாலன்(32).  கடந்த மாதம் 12ம் தேதி ஏ.கே.குச்சிப்பாளையத்தைச்  சேர்ந்த நந்தகுமார் என்பவர் காரில் செல்லும்போது, பிரபாகரன் வளர்த்த  நாய்மீது  கார் மோதியதில் நாய் உயிரிழந்தது. இதனால் இரு தரப்புக்கும்  தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து  அனுப்பிவைத்தனர். இந்நிலையில் அன்று பிற்பகல் நந்தகுமார் தனது  ஆதரவாளர்களுடன் வந்து பிரபாகரனை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில்  படுகாயமடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரின் ஒரு காலை அகற்றியுள்ளனர். தொடர்ந்து  சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பியுள்ளார். இது குறித்து  பிரபாகரனின் உறவினர் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா  போலீசார் நவின், நந்தகுமார், ஜெயமூர்த்தி ஆகியோர்மீது வழக்கு பதிவு  செய்தனர். இதில் நந்தகுமார் மட்டும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்  மற்ற இருவரையும் கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பிரபாகரன் மற்றும்  அவரது குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என்று உறுதியளித்தன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து  சென்றனர்.

Tags : Dharna ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...