×

கோட்டூர் அடுத்த நாராயணபுரம் களப்பாளில் துணை வேளாண்மை விரிவாக்க மையம்

மன்னார்குடி,செப்.7: கோட்டூர் அடுத்த நாராயணபுரம் களப்பாளில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.38 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் திறந்து வைத்தார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை சார்பில் கோட்டூர் அடுத்த நாராயணபுரம் களப்பாளில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.38 லட்சம் மதிப்பில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. இக்கட்டிடத்தின் திறப்பு விழா எம்எல்ஏ மாரிமுத்து, வேளாண் இணை இயக்குனர் ரவீந்திரன், கோட்டூர் அறங்காவலர் குழு தலைவர் பாலஞானவேல், வேளாண் உதவி இயக்குனர் சுவாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் கலந்து கொண்டு தலைமை துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்து பேசுகையில், இந்த துணை வேளாண் விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டிரியா, திரவ பொட்டாஷ் போன்ற உயிர் உரங்கள் கிடைக்கும். மேலும், உயிரியல் காரணியான ட்ரைகோ டெர்மா விரிடி மற்றும் சூடோ மோனஸ், நெல் பயறு வகை பயிர்கள், பருத்தி போன்ற நுண்ணுட்டங்கள், வேளாண் இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார். புதிதாக திறக்கப்பட்ட இந்த வேளாண் துணை மையத்தின் மூலம் களப்பால், நல்லூர், ஒரத்தூர், குறிச்சி மூலை, திருக்களர், மீனம்பநல்லூர், பாலையூர், கருப்புகிளார், மற்றும் வாட்டார் உள்ளிட்ட 9 கிராமங்களை சேர்ந்த 2200 விவசாய குடும்பங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kottur ,Narayanapuram field ,
× RELATED 5 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளை...