×

பூதலூர் அருகே கோயில் பூட்டை உடைக்க முயற்சித்த 2 பேர் சிக்கினர்

பூதலூர், செப். 7: பூதலூர் அருகே கோயில் பூட்டை உடைக்க முயற்சி செய்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பூதலூர் அருகே வெண்டையம்பட்டியில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 5ம் தேதி மாலை 4 மணி அளவில் 2 பேர் கோயிலின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்த மக்கள் அந்த 2 பேரையும் பிடித்து பூதலூர் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து செயல் அலுவலர் ராமராஜன் பூதலூர் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் துவாக்குடி ஈச்சங்காடு பெரியார் நகரைச் சேர்ந்த கலிங்கமூர்த்தி மகன் சிவ பால கணேஷ் (27) மற்றும் திருவரம்பூர் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்த முத்து மாரியப்பன் மகன் நாகராஜ் ( 21) என்பதும், இவர்கள் கோயிலில் பூட்டை உடைக்க முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பூதலூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Boothalur ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி...