கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை வழிமறித்து மிரட்டிய காட்டு யானைகள்

கோத்தகிரி, செப்.6: கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து காட்டு யானைகள் மிரட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானை கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் நான்காவது கொண்டை ஊசி வளைவுவில் பகல் நேரத்தில் குட்டியுடன் இரண்டு யானைகள் சாலையில் உலா வந்து வாகனங்களை மறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகள் எவ்வித அச்சமும் இன்றி வாகனங்களை நோக்கி வந்து மிரட்டியது. இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வாகன ஓட்டிகளை மிரட்டும் காட்டுயானைகளை அடர்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: