மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கோவை, செப்.6: தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் குனியமுத்தூர் மின்அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (7ம் தேதி) நடக்கிறது. இக்கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில், மேற்பார்வை பொறியாளர் குப்புராணி பங்கேற்று நுகர்வோரிடம் குறைகளை கேட்டறிய உள்ளார். அவரிடம், மின் தொடர்பான புகார்கள், குறைகளை நேரடியாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், செயற்பொறியாளர் நகரியம், கோவை அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நக்கீரன் முன்னிலையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், கோவை அலுவலகத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் பங்கேற்று மின் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: