×

ஆண்டிபட்டியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஆண்டிபட்டி, செப். 6: ஆண்டிபட்டி அருகே அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடந்த 2008 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் ஒன்றிணைந்து சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் இந்துசேனன் வரவேற்பு உரையாற்றினார். இந்த நிகழ்சியின் போது தற்போது பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம், அன்புகுமார், சந்தோஷ் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags : Antipatti ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை