திருத்துறைப்பூண்டியில் இன்று 24 விநாயகர் சிலைகள் ஊர்வலம் முல்லையாற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது

திருத்துறைப்பூண்டி,செப்.3: திருத்துறைப்பூண்டியில் இன்று 24 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முல்லையாற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர இந்து முன்னணி சார்பில் ஒன்றிய, நகர பகுதியில் உள்ள இடங்களில் இருந்து 23 விநாயகர் சிலைகள்  அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தின் சன்னதி தெருவில் இருந்து இன்று (3ம் தேதி) மாலை 4 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள விநாயகர் சிலை உட்பட 24 விநாயகர் சிலைகள் ஊர்வலம் பாஜக திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா முன்னிலையில் செல்கிறது. பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் துவக்கி ஊர்வலத்தை வைக்கிறார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மன்னை சாலை ரயில்வே கேட் அருகே உள்ள முல்லையாற்றில் 24 விநாயகர் சிலைகளும் விசர்ஜனம் செய்யப்படுகிறது. நிகழ்ச்சியில் விழா கமிட்டி நிர்வாகியும், பாஜக மாவட்ட துணை தலைவருமான தமிழ்பால்சிவகுமார், பாஜக மாவட்ட செயலாளர் வினோத், பாஜக ஒன்றிய தலைவர் பூபதி, இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மாதவன், பாஜக முன்னாள் துணைத் தலைவர் இளசு மணி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். பொதுமக்களும் இளைஞர்களும் கலந்து கொள்வேண்டும் என்று கேட்டுகொண்டு உள்ளனர்.

Related Stories: