×

புன்னம்சத்திரம் அருகே எங்க ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலாயுதம்பாளையம், செப்.3: கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மந்திராசலம் கலந்துகொண்டு மாணவிகளிடம் பேசும்போது, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது. தொடர்ந்து நெகிழியை பயன்படுத்தும்போது ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் நகர மற்றும் கிராமப்புறங்களில் வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கிராமங்களையும் குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது துணிப்பை பயன்படுத்த வேண்டும். என் குப்பை என் பொறுப்பு. என் கிராமம் தூய்மை கிராமம் என உறுதி மொழியை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மறு சுழற்சிக்குரிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்து மாணவிகளிடையே நெகிழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்புமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், முதல்வர் முனைவர் சாருமதி மற்றும் வருவாய்த்துறை ,ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Enga ,Punnamchatram ,
× RELATED பப்புவா நியூ கினியாவில்...