×

போகலூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு

பரமக்குடி, ஆக.24: போகலூர் ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார். பரமக்குடி வட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் எட்டிவயல் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். அதற்கு ஏற்படும் செலவீனங்கள்,அரசு மூலம் கொடுக்கப்படும் பொருள்கள் குறித்து வீட்டு உரிமையாளர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து போகலூர் ஊராட்சி மயானத்தையும், சத்திரக்குடி கிராம சந்தையில் உள்ள கழிப்பறை மற்றும் வளாகத்தையும் பார்வையிட்டு சுத்தமாகவும் சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சத்திரக்குடி ஊராட்சி தீயனூர் கிராமத்தில் பிரதம மந்திரி கிராமச் சாலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய தார் சாலையையும், கவிதைக்குடி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்ஓ பிளான்ட் மூலம் வழங்கப்படும் குடிதண்ணீரின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பரமக்குடி தாசில்தார் தமீம்ராஜா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சுதர்ஷன்,போகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pokalur Union ,
× RELATED போகலூர் ஒன்றியத்தில் கிராம மக்களிடம் குறைகளை கேட்ட கலெக்டர்