×

திருப்பரங்குன்றத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருப்பரங்குன்றம், ஆக. 24: திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் இந்திராணி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் சுவிதா விமல், துணைமேயர் நாகராஜன், கவுன்சிலர்கள் ரவிசந்திரன், இந்திராகாந்தி, சிவசக்தி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் ஜிஎஸ்டி சாலையில் கிடப்பில் உள்ள சர்வீஸ் சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும். திருப்பரங்குன்றத்தில் பேருந்து நிலையம் அமைத்து தரவேண்டும். மேலும் எஸ்ஆர்வி நகரில் சாக்கடை வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மாநகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : People's Grievance Meeting ,Tiruparangundram ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 8 வரை ரத்து