×

இளையான்குடியில் கனமழை

இளையான்குடி, ஆக.23:  இளையான்குடி பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இளையான்குடி, கோட்டையூர், சாலைக்கிராமம், சூரணம், புத்தூர், சாத்தனூர், முனைவென்றி, கருஞ்சுத்தி ஆகிய இடங்களில் நேற்று மாலை  4 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 45 நிமிடங்கள் பெய்த மழையால் சாலை, தெருக்களில் தண்ணீர் வழிந்தோடியது.  மேலும் ஈரப்பதமான விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையை பயன்படுத்தி விதைப்புக்கு நிலங்களை தயார் செய்யலாம் என இளையான்குடி வட்டார விவசாயிகள் கூறினர்.


Tags : Ilayankudi ,
× RELATED இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை