×

கார்ப்பரேஷன் ஆக மாற்றும் திட்டத்தை கைவிட கோரி தஞ்சாவூரில் அஞ்சல் ஊழியர் கூட்டு போராட்ட குழு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.11: அஞ்சல் ஊழியர் கூட்டு போராட்ட குழு சார்பில் தஞ்சை மாவட்டத்தில் மூன்று இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார் மேலும் தஞ்சை கோட்டத்தில் 863 பேரில் 309 பேர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை கோட்டத்தில் 306 பேரில் 111 பேரும், கும்பகோணத்தில் 539 பேரில் 106 பேரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில்,அஞ்சல் துறையை கார்ப்பரேஷன் ஆக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனா தொற்றால் இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத டி.ஏ. நிலுவை தொகையை வழங்க வேண்டும். அஞ்சல் ஆர்.எம்.எஸ்.அலுவலகங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் தபால் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டது.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...