கோவில்பட்டி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

கோவில்பட்டி, ஆக. 10:  கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் நந்திகேஷ்வரருக்கு பால், தேன், பன்னீர், சந்தனம்,  குங்குமம், இளநீர் உட்பட 18 வகையான நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத தீபாராதனைகளை செண்பகநாத பட்டர்,  ரகு பட்டர் முன்னின்று நடத்தினர். இதில்  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ மற்றும் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள்  புற்றுக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.  பூஜைகளை சுப்பிரமணி அய்யர் முன்னின்று நடத்தினார். இதில் கோயில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் என திரளானோர் பங்கேற்று தரிசித்தனர்.

Related Stories: