×

திருப்புவனம் நெல்முடிகரை திரவுபதை அம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புவனம், ஆக.4:  திருப்புவனம் நெல்முடிகரையில் அமைந்துள்ள திரவுபதை அம்மன் கோயில் பூக்குழி உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டினர். ஒவ்வொரு நாளும் கிருஷ்ணர் வழிபாடு, திருக்கல்யாணம், சுவாமி அம்பாள் ஊர்வலம், பீமன் கீசன் வட நிகழ்ச்சி, அர்ஜூனன் தபசு, திரவுபதை கூந்தல் விரிப்பு, கூந்தல் முடிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. 11ம் தேதி பால்குடம், பூவளர்த்தல், பூக்குழி இறங்குதல் உட்பட பத்து நாட்கள் உற்சவம் நடத்தப்படுகிறது. வீரபத்திரன் பூசாரி மற்றும் கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags : Thirupuvanam Nelmudikarai Thirupadai Amman Temple Pookkuzhi Festival ,
× RELATED காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை...