×

வளர் பிறை பஞ்சமி பூஜை

சாயல்குடி, ஆக.4:  ஆடி மாத வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வராஹிஅம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சுயம்பு மஹா வராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகை அபிஷேகம் நடந்தது. மஞ்சள், வெற்றிலை, வேப்பிலையை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  அம்மன் காப்பு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டது. பொதுமக்கள் மஞ்சள் அறைத்து, அம்மனுக்கு காப்பு செலுத்தி வழிபட்டனர். மேலும் ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

Tags :
× RELATED வாடகைக்கு பேசி ₹25 லட்சம் வாங்கிவிட்டு...