×

திருவிடைமருதூர் அருகே அணைக்கரையில் சப்பர திருவிழா தேரோட்டம்

திருவிடைமருதுார், ஆக. 4: திருவிடைமருதூர் அருகே அணைக்கரையில் கங்கை கொண்டசோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில் சப்பர திரு விழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு திருவிழாவ ன்று சிறுவர்கள் சப்பரங்க ளை வண்ண கொடிகள், சுவாமி படங்களால் அலங்கரித்து அவரவர் வீட்டிலிருந்து அருகில் உள்ள ஆறுகளுக்கு பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள், அக்கம் பக்கம் வீட்டில் வசிப்பவர்கள், உறவினர் கள் சகிதம் இழுத்து சென்று வழிபாடு செய் வது வழக்கம். அந்த வகை யில் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் சார்பில் ஆடிப் பெருக்கு சப்பரம் திருவிழா அணைக்கரையில் நேற்று நடைபெற்றது.

பல் வேறு கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள், சிறு மிகள், பள்ளி மாணவ, மாணவிகள் சப்பரத் தேரை அழகாக வடிவமைத்து கொண்டு வந்திருந்தனர். இதில் கங்கைகொண்ட சோழபுரத்தை சேர்ந்த காளிதாஸ் மாரிமுத்து என்பவருக்கு ரூ.10 ஆயிரம் முதல்பரிசு, மேலும் 6 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கோ.கஅண்ணாதுரை, கங்கைகொ ண்டசோழ புரம் மேம்பாட்டுக் குழுமம் தலைவர் ரா.கோமகன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Sappara festival procession ,Thiruvidaimarudur ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் அரிசி...