×

தமிழ்நாடு தாட்கோ தலைவர் தகவல் முத்தாட்சி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

மயிலாடுதுறை, ஆக. 3: மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நாஞ்சில்நாட்டில் எழுந்தருளியிருக்கும் முத்தாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு பூச்சொரிதல் மற்றும் புஷ்ப பல்லக்கு நடைபெற்றது. இராமர் பிறந்த அயோத்தி மாநகரிலிருந்து இடம் பெயர்ந்து வந்த பட்டாரியர்கள் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் தங்கி, அங்கிருந்து மயிலாடுதுறை பகுதியில் குடியேறியதாக ஐதீகம். அதை நினைவு படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் அவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு நாஞ்சில்நாடு என்று பெயரிட்டு வசித்து வருகின்றனர். மேலும் தங்களின் குலதெய்வமான முத்தாட்சியம்மனுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் தினத்தன்று பூச்சொரிதல் விழா மற்றும் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மாலையில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

தொடர்ந்து இரவு நடைபெற்ற புஷ்ப பல்லக்கு உற்சவத்தில் முத்தாட்சி அம்மன் பல்லக்கில் எழுந்தருள செய்து, மகாதீபாராதனை காட்டப்பட்டு வீதி உலா நடைபெற்றது. பல்லக்கின் முன்புறம் காளை வாகனத்தில் சிவலிங்கம் அமர்ந்திருப்பது போலவும், பின்புறம் பாம்பு புற்றிலிருந்து நாகம் படம் எடுப்பது போன்றும் தத்ரூபமாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. வீதி உலா வந்த அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு அம்மனுக்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விடுதிகளில் தங்கினால் விடுதி உரிமையாளர்கள் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

Tags : Tamil Nadu ,TADCO ,Muttakshi Amman Temple ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை