பல்லடத்தில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

பல்லடம், ஜூலை 29: பல்லடத்தில் இன்று (29ம் தேதி) வெள்ளிக்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,``பல்லடம் நகராட்சி அண்ணா நகர் முதல் மங்கலம் சாலை வரையிலான பகுதியில் பழைய பிவிசி குழாய்களை அகற்றி விட்டு நீர் கசிவு ஏற்படாத வகையில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிய குழாய்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. பிரதான குடிநீர் மேல்நிலை தொட்டியில் குழாய்களை இணைக்கும் பணி இன்று (29ம் தேதி) நாளை (30ம் தேதி) ஆகிய 2 நாட்கள் நடைபெற இருப்பதால் வார்டு எண்: 5,6,8,9,10,11 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது’’ என நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.

Related Stories: