9 சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி

கடலூர், ஜூலை 28: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காகவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் வரும் 1ம் தேதி முதல்  நடைபெற உள்ளது. அதன்படி அனைத்து வாக்காளர்களும் தாமாக முன் வந்து தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம்-6டீ-ஐ பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணினை இணைத்துகொள்ளலாம். மேலும் வாக்காளர்கள்  இணையதளம் மற்றும் ஆப்  மூலமும் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.

ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். இப்பணியானது கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 1ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் பூர்த்தி செய்யப்பட்ட படிவம்-6டீ-உடன் தங்களது ஆதார் அட்டை நகலை இணைத்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தாமாக முன்வந்து அளித்தோ அல்லது  இணையதளம் மற்றும் ஆப்  வழியாகவோ தங்களது ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.

Related Stories: