×

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் தஞ்சாவூரில் மாவட்ட அளவில் செஸ் போட்டி

தஞ்சாவூர், ஜூலை 27: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்க உள்ளதையொட்டி தஞ்சையில் நடந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான செஸ் போட்டியை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் செஸ் விளையாடி தொடங்கி வைத்தார். 44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நாளை (28ம் தேதி) சென்னையில் நடைபெறுவதை ஒட்டி, இப்போட்டியில் விளையாடவும், பார்வையாளர்களாக பங்கேற்கவும் தகுதி தேர்வு போட்டி ஒரு வாரமாக நடந்து வருகிறது. தஞ்சை கல்யாண சுந்தரம் மேனிலை பள்ளியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. போட்டியை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாருடன் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். உடற்கல்வி அலுவலர் தேன்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 270 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களில் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் பங்கேற்று நிச்சயம் வெற்றி பெற்று சென்னை உலக செஸ் போட்டியில் பங்கேற்போம் என்று மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...