×

மெக்கானிக் கொலையில் மனைவி, மச்சான் கைது

மானாமதுரை, ஜூன் 25:  மானாமதுரை ரயில்வே காலனி ஜீவாநகரை சேர்ந்தவர் சுரேஷ்(40). டூவீலர் மெக்கானிக். இவரது மனைவி மலைச்செல்வி. தம்பதி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மலைச்செல்வியின் தம்பி மானாமதுரை அருகே சோமாத்தூரை சேர்ந்த கணேசன், சித்தி மகன் மானாமதுரை உடைகுளத்தை சேர்ந்த கார்த்திக் ஆகியோர், சுரேஷை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கணேசன், கார்த்திக் மற்றும் கொலைக்கு தூண்டுதலாக இருந்த சுரேஷ் மனைவி மலைச்செல்வி, உறவினர் ஆறுமுகம் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Tags : Machan ,
× RELATED கவர்ச்சி வலை வீசும் மச்சான் நடிகை