கம்பத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்: 12 இடங்களில் நடக்கிறது

கம்பம், ஜூன் 11: கம்பம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் நாளை ஜூன் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், நகராட்சி ஆணையர் பாலமுருகன் தெரிவித்தனர். இம்முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாவது தடுப்பூசி செலுத்த தவறியவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி தங்க விநாயகர் கோவில் அங்கன்வாடி, அல்போன்ஸ் பள்ளி, மாலையம்மாள்புரம், மந்தையம்மன் கோவில் வடக்குபட்டி, கம்பமெட்டு காலனி அங்கன்வாடி மையம், கோட்டை முக்தி விநாயகர் பள்ளி, சி.எஸ்.ஐ.பள்ளிக்கூடம், நகராட்சி அலுவலகம், கள்ளர் ஆரம்பப்பள்ளி, உழவர் சந்தை அருகில், ஒக்கலிகர் சாவடி நாட்டுக்கல், காமாட்சியம்மன் கோயில் கிராமச்சாவடி தெரு, கம்பம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 12 இடங்களில் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தனர். இம்முகாமிற்க்கு வருகை தரும் பொதுமக்கள் அனைவரும் ஆதார் கார்டு நகல் கொண்டு வரும்படியும், மொத்தம் 5000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: